தற்போதைய செய்திகள்

 திருப்பதியில் பேருந்து வழக்கம் போல் இயங்கியது

ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்ற போதிலும் திருப்பதியில் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கபட்டது.

சி. சுரேஷ்குமார்

ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்ற போதிலும் திருப்பதியில் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கபட்டது.

    ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்க மறுத்த மத்திய அரசை கண்டித்து சனிக்கிழமை ஆந்திர எதிர்கட்சிகள் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தியது. அதனால் விஜயவாடா, குண்டூர் மாவட்டங்களில் பந்த் முழு அளவில் கடைபிடிக்கபட்டது. கடைகள், வியாபார நிறுவனங்கள், பள்ளி, கல்லுôரிகள் மூடபட்டன. 

   ஆனால் சித்தூர் மாவட்டத்தில் பந்த் பெயரளவில், நடைபெற்றது. திருப்பதி மற்றும் சித்தூரில் காலை முதல் வழக்கம் போல் கடைகள் திறந்திருந்தன. ஆனால் பள்ளிகள், கல்லுôரிகள் மூடபட்டது. திருப்பதியில் காவல்துறை ஊர்வலம், போராட்டம் நடத்த 144 தடை உத்திரவு பிறப்பித்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை சேர்ந்த 56 பேர் திருப்பதியில் கைது செய்யபட்டனர்.

  வேலுôரிலிருந்து திருப்பதிக்கு வரும் தமிழக பேருந்துகள் இயக்கபடவில்லை. திருப்பதியிலிருந்து ஆந்திர மாநில சாலைபோக்குவரத்து கழகத்தை சேர்ந்த குளிர்சாதன பேருந்து தவிர்த்து மற்ற பேருந்துகள் சென்னை, வேலூர், விஜயவாடா, குண்டூர், நெல்லுôர், விசாகபட்டிணம் நகரங்களுக்கு மதியத்திற்கு மேல் இயக்கபட்டது. திருமலைக்கு பந்திலிருந்து விலக்கு உள்ளதால் பேருந்து வழக்கம் போல் இயக்கபட்டது. ஆந்திராவில் பந்த் காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் சற்று குறைந்திருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT