தற்போதைய செய்திகள்

பீட்டாவுக்கு சமர்ப்பிக்க ஒரு வீடியோ ஆதாரம்: 

காளைக்கு அந்த வட்டார மக்கள் அளித்த இறுதி அஞ்சலி மரியாதைகளைக் கண்டு ஆச்சரியமாகவும் இருந்தது. மனிதர்களின் இறுதி அஞ்சலிக்கு நிகராக ஒரு மாட்டுக்கும் கெளரவமிக்க இறுதி மரியாதை கிடைக்கிறது.

கார்த்திகா வாசுதேவன்

ஜல்லிக்கட்டு பற்றி யூ டியூப்பில் தேடிக் கொண்டிருந்த போது கிடைத்தது இந்த வீடியோ பதிவு. சில வருடங்களுக்கு முன்பு வரை ஜல்லிக்கட்டில் கலக்கிக் கொண்டிருந்த ஒரு காளைமாட்டின் அபூர்வமான வாடிவாசல் ஜல்லிக்கட்டு காட்சிகளின் தொகுப்பு இந்த வீடியோ. காளைமாட்டின் பெயர் அப்பு. தொகுப்பின் இறுதியில் அந்த காளை தற்போது உயிருடன் இல்லை எனும் செய்தி வருத்தமளித்தாலும், காளைக்கு அந்த வட்டார மக்கள் அளித்த இறுதி அஞ்சலி மரியாதைகளைக் கண்டு ஆச்சரியமாகவும் இருந்தது. மனிதர்களின் இறுதி அஞ்சலிக்கு நிகராக ஒரு மாட்டுக்கும் கெளரவமிக்க இறுதி மரியாதை கிடைக்கிறது.

இப்படிப் பட்ட நெகிழ்வான மனம் கொண்ட ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களையும், மாடு பிடி வீரர்களையும் தான் பீட்டா அமைப்பு குறை கூறி வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுகும் முன்பு அவர்கள் ஏன் இது போன்ற வீடியோக்களையும் கூட ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு பார்த்திருக்கக் கூடாது? ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டுமென விரும்புபவர்கள் அதை உள்ளும், புறமுமாக ஆராய்ந்திருக்க வேண்டுமே! தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு என்றால் என்ன? அதை விரும்பும் மக்களின் அடிப்படை உணர்வுகள் என்ன? மக்கள் தங்களுடைய தன்மான உணர்வை, வீரத்தை, கொண்டாட்ட மனநிலையை, பாரம்பரியத்தை விடாமல் பின்பற்ற முயலும் விட்டுக்கொடுக்காத தன்மையை இத்தனையையும் உள்ளடக்கிய பேரன்பை இதையெல்லாம் ஆராயாமல் எப்படி ஒரு தலைபட்சமாக உச்சநீதிமன்றம் பீட்டாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது? என்று யோசிக்கும் போது மனவருத்தமே மிஞ்சுகிறது. 

Video courtsy: youtube

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

SCROLL FOR NEXT