தற்போதைய செய்திகள்

தாயின் வயிற்றிலிருக்கும் 26 வாரக் கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

தாயின் வயிற்றிலிருக்கும் கருவுக்கு தீராத இதய நோய் அறிகுறிகள் இருப்பதால், கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.

RKV

தாயின் வயிற்றிலிருக்கும் கருவுக்கு தீராத இதய நோய் அறிகுறிகள் இருப்பதால், கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. நீதிமன்ற அனுமதிக்கு முன் 26 வாரக் கருவைக் கலைப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப் பட்டது. இந்திய மருத்துவ வரலாற்றில் தாயின் வயிற்றிலிருக்கும் கருவுக்கு இந்த உலகில் பிறந்து வாழ பூரண உரிமை உண்டு. எனவே இம்மாதிரியான வழக்குகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பலவும் கருவுக்கு ஆதரவளிப்பதாகவே இயற்றப்பட்டுள்ளன. அதனால் தான் இன்று அளிக்கப் பட்டுள்ள இந்த தீர்ப்பு கவனத்திற்குரியதாகக் கருதப் படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கருக்கலைப்பு சட்டப்படி தவறு. ஆனால் இந்தக் குறிப்பிட்ட வழக்கில் 6 மாத வளர்ச்சிக்கும் அதிகமான இந்தக் கருவுக்கு பிறவி இதய நோய் காரணங்கள் அதிகமிருப்பதால் இந்தக் கரு பிறந்த பின்னும் உயிர் வாழ்தல் கடினம் என்பதால் மட்டுமே இப்படி ஒரு தீர்ப்பு அளிக்கப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT