தற்போதைய செய்திகள்

பாலகங்காதர திலகரின் கொள்ளுப்பேரன் பாலியல் வன்முறை வழக்கில் கைது!

புனேவில் வசித்து வரும் ரோஹித் திலக், தனக்கு முன்பே அறிமுகமானவரான அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.

RKV

சுதந்திரப் போராட்ட வீரரும், லோகமான்யா என்ற பட்டப் பெயர் கொண்டவருமான பால கங்காதர திலகரின் கொள்ளுப் பேரன் ரோஹித் திலக்கை 40 வயதுப் பெண்மணி ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்திருக்கிறது மகாராஷ்டிர காவல்துறை. ரோஹித் மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சியில் முக்கிய உறுப்பினராகச் செயல்பட்டு வருபவர். இவரது தாத்தா ஜெயந்த்ராவ் திலக் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியவர்.

புனேவில் வசித்து வரும் ரோஹித் திலக், தனக்கு முன்பே அறிமுகமானவரான அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். தற்போது இயற்கைக்கு மாறான உறவுக்கு தன்னை வற்புறுத்துவதாகக் கூறி ரோஹித் மீது அப்பெண்மணி புகார் அளித்ததின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளது மகாராஷ்டிர காவல்துறை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT