தற்போதைய செய்திகள்

ஜெயலலிதாவுக்கு கலைஞரைப் பிடிக்காதென்று யார் சொன்னது?

ஜெயலலிதாவுக்கு கலைஞரைப் பிடிக்கும் என்பதை டிடிவி தினகரன் வாயால் கேட்கும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

RKV

ஓரிரு மாதங்களுக்கு முந்தைய தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் ஆர்.கே.நகர் நாடாளுமன்ற உறுப்பினரும் அதிமுக பிளவுபட்டதின் பின் உருவான... அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அணியின் தலைவருமான டிடிவி தினகரன் அவர்களின் உரையாடலைக் கேட்க நேர்ந்தது. அதில் இதுவரை ஊடகங்களில் தான் பகிர்ந்திராத சில சுவாரஸ்யமான தகவல்களை டிடிவி பகிர்ந்திருந்தார். அதில் சில உங்களுக்காக;

'தலைவர் இறந்த அன்று இரவில் அம்மாவுக்கு முதலில் விஷயம் தெரியாது. என் சித்தப்பா நடராஜன் என்னை ராமாவரம் தோட்டப் பகுதிக்கு நேரில் சென்று விசாரித்து வரச் சொன்னார். ஆனால் ஆழ்வார்பேட்டையிலிருந்து கலைஞரின் வீடு தான் பக்கம் என்பதால் நான் முதலில் சித்தப்பாவின் மாருதி காரில் நேராக அங்கே சென்றேன்.' 

எம்ஜிஆர் இறந்த விஷயத்தை எதிரி முகாமில் போய் விசாரிப்பானேன்? என்று நேர்காணல் செய்து கொண்டிருந்தவர் கேள்வியெழுப்பினார். //நியாயமான கேள்வி//

'இல்லை அவர்கள் அரசியல் ரீதியாகத்தான் எதிரிகளாக இருந்தார்களே தவிர, கலைஞரும், தலைவரும் ஆரம்ப கால நண்பர்கள் என்பதால் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு ஆழ்ந்த ப்ரியம் உண்டு. எனவே தலைவருக்கு ஏதாவதொன்றால் முதலில் தகவல் கலைஞர் வீட்டுக்கு வந்திருக்கக் கூடும் என்பது என் கணிப்பு. அந்தக் கணிப்பு நிஜமானது. கலைஞரின் வீட்டில் அந்த அகால நேரத்தில் மாடி அறையில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. அங்கிருந்த செக்யூரிட்டி வளாகத்தில் கூடியிருந்தவர்களிடம் விசாரித்ததில் தலைவர் இறந்து விட்டார் அதனால் தான் இந்தப் பரபரப்பு என்று கூறினார். நான் உடனே வீட்டுக்கு வந்து தகவல் தெரிவித்ததும் நாங்கள் எல்லோருமாகச் சேர்ந்து தான் அம்மாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்குச் சென்றோம். நாங்கள் சென்று தலைவர் இறந்த தகவலைத் தெரிவிக்கும் வரை அம்மாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கப் படவில்லை. அம்மா வீட்டில் இருந்த செக்யூரிட்டி அதிகாரி மேலிட உத்தரவால் அம்மாவுக்கு தலைவர் இறந்த தகவலை தெரிவித்திருக்கவில்லை. நாங்கள் தலைவர் இறந்து விட்டார் என்று தெரிவித்தபோது அம்மா மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். பிறகு சமாளித்துக் கொண்டு எங்களுடன் அவரது காண்டஸா காரில் ராமாவரம் தோட்டத்திற்கு விரைந்தார். அங்கே எங்களுக்கு தலைவரின் சடலம் வாகனத்தில் ஏற்றப்படுவதைக் காண அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் நாங்கள் எங்கள் பாதுகாப்பு வளையத்தில் அம்மாவைக் கொண்டு வந்து அவருக்கு பாதிப்பு நேராமல் தலைவரின் உடல் இருந்த ராஜாஜி மண்டபத்துக்கு தலைவரின் உடல் சென்ற வாகனத்தின் பின்னே விரைந்தோம். அதற்குப் பிறகு நடந்த விஷயங்கள் அனைத்தும் வரலாறு அதை எல்லோரும் அறிவர்.’

- என்றார் டிடிவி. அதைத் தொடர்ந்து அவரிடம்;

ஜெயலலிதா, எம்ஜிஆர் அல்லாது எதிரி முகாமில் உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர்கள் யார்? என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.

‘எனக்கு மூப்பனாரை மிகவும் பிடிக்கும், அவர் அரசியல்வாதி மாதிரியே பழக மாட்டார். ஜெம் ஆஃப் அ பெர்சன். மிகவும் யதார்த்தமான மனிதர். ஏன் கலைஞரையும் எனக்குப் பிடிக்குமே’ என்றார்.

இந்த பதிலைக் கேட்டு நேர்காணலை நடத்திக் கொண்டிருந்தவர், ‘இந்த விஷயம் செல்வி ஜெயலலிதா அவர்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க; அதற்கும் டிடிவி; 

‘தெரியுமே.... ஏன் அம்மாவும் கூட அவரை பாராட்டுவாரே, அரசியல் எதிரி என்பது வேறு ஆனால் சாதாரண நிலையிலிருந்து அரசியலில் இத்தனை உயரத்தை அடைந்த கலைஞரது போராட்ட குணம் அம்மாவுக்கும் பிடிக்கும், அதைக்குறித்து அவரும் பாராட்டுவார்... கலைஞரின் பழிவாங்கும் குணம் தான் அம்மாவுக்குப் பிடிக்காதே தவிர, மற்றபடி பெர்சனலாக கலைஞரின் மீது அம்மாவுக்கு எந்தவிதமான பகையும் கிடையாது’ ஆகவே கலைஞரை எனக்கும் பிடிக்கும்.  என்றார் டிடிவி தினகரன். 

தலைவர் முதல்வராக இருந்த போது தொடர்ந்து 13 ஆண்டுகள் எதிர்கட்சியாக நீடித்த போதும் பொறுமையுடன் தனது வெற்றிக்காக காத்திருந்த கலைஞரின் திறமை எனக்குப் பிடிக்கும். பிறகு அம்மா காலத்தில் மதிமுக கலைஞரை விட்டுப் பிரிந்த போதும் அந்த காலகட்டங்களை எல்லாம் தைரியமாக எதிர்கொண்டு அரசியல் நடத்திய கலைஞரின் திறமை மீது எனக்கு மட்டுமல்ல அம்மாவுக்கும் பெரிய மரியாதை உண்டு. என்று தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு கலைஞரைப் பிடிக்கும் என்பதை டிடிவி தினகரன் வாயால் கேட்கும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

Image courtesy: scroll.in

concept courtesy: thanthi tv

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 தொடரை வென்றது இலங்கை!

அமெரிக்க வரியால் 2-ஆம் காலாண்டில் தாக்கம்: சிஇஏ நாகேஸ்வரன்

வாக்குத் திருடா்களை பாதுகாக்கிறது தோ்தல் ஆணையம்: காா்கே குற்றச்சாட்டு

நாளை குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமா் இன்று விருந்து

ரஷியா - இந்தியா - சீனா உறவு பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு: ரஷிய வெளியுறவு அமைச்சா்

SCROLL FOR NEXT