முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒளியேற்றும் வேளையில் தக்க முன்னேற்பாடு: மின்வாரியம் உறுதி

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க ஒளியேற்றும் வேளையில் பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:21 PM
பகிர்:

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க ஒளியேற்றும் வேளையில் பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக 130 கோடி இந்தியர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதை வெளிப்படுத்தும் நோக்கில், மக்கள் அனைவரும் நாளை ஞாயிறு இரவு 9 மணிக்குத் தொடங்கி ஒன்பது நிமிஷங்களுக்குத் தங்கள் வீட்டிலுள்ள மின் விளக்குகளை அணைக்குமாறும், இதர விளக்குகளை ஒளிரச் செய்யுமாறும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தத் தருணத்தில் மின்கட்டமைப்பில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் எடுக்கப்பட்டுள்ளது.

மின்விளக்குகளை மட்டும் அணைத்துவிட்டு மற்ற மின் சாதனங்களை வழக்கம் போல் இயக்கத்தில் வைத்துக்கொள்ளுமாறு மின்வாரியம்  அறிவுறுத்தியுள்ளது. மேலும், மக்கள் யாரும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் மின்வாரிய செய்திக்குறிப்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.