முகப்பு
அகமதாபாத் மருத்துவமனை தீ விபத்து: உரிய விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு
தற்போதைய செய்திகள்

ஆமதாபாத் மருத்துவமனை தீ விபத்து: உரிய விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு

ஆமதாபாத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து எதிரொலியாக 41 பேர் சர்தார் வல்லபாய் படேல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
அகமதாபாத் மருத்துவமனை தீ விபத்து: உரிய விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு
பகிர்:

ஆமதாபாத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து எதிரொலியாக 41 பேர் சர்தார் வல்லபாய் படேல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குஜராத் ஆமதாபாத் தனியார் மருத்துவமனையில் தனிவார்டு மூலம் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இன்று (வியாழக்கிழமை) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து குஜராத் அரசு தலைமைச் செயலாளர் ராஜீவ் குமார் குப்தா பேசியதாவது, தீ விபத்து ஏற்பட்ட தனியார் மருத்துவமனைக்கு  சீல் வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை. உரிய விசாரணைக்கு பிறகே தீ விபத்துக்கான காரணம் தெரியவரும். மருத்துவமனை அறக்கட்டளையை சேர்ந்தவர்களிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், மருத்துவமனை தீ விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்த கூடுதல் தலைமை செயலாளர் சங்கீதா சிங்கை நியமித்து குஜராத் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மூன்று நாட்களுக்குள் விபத்துக்கான காரணம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →