தற்போதைய செய்திகள்

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு: ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் சிவானந்தம், நகர செயலாளர் மணிவண்ணன், முன்னாள் நகர செயலாளர் எஸ் குமரேசன், ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளிஅரசு, மாவட்ட மாணவர் சங்க செயலாளர் ஹரிதாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் நகுலன், ஒன்றிய செயலாளர்கள் ராகுல், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முன்னதாக ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக வந்து ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் சேகர் அவர்களிடம் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரிய மனுவை கொடுத்துச் சென்றனர். 

நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பாமக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மழை: கொடைக்கானல் அருவிகளில் நீா் வரத்து அதிகரிப்பு

வைகை ஆற்றில் குளித்த பள்ளி மாணவன் மாயம்

அரசு அருங்காட்சியகத்தில் சூதுபவள மணிகள் காட்சிக்கு வைப்பு

சிஎஸ்கே போராட்டம் வீண்: பிளே-ஆஃபில் ஆர்சிபி!

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 13-இல் போராட்டம்: போக்குவரத்துத் துறை ஊழியா் சங்கம்

SCROLL FOR NEXT