தற்போதைய செய்திகள்

ஊழியருக்கு கரோனா:  முதல்வர் நாராயணசாமியைத் தனிமைப்படுத்த சுகாதாரத் துறை அறிவுரை

புதுவை முதல்வர் நாராயணசாமி தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

DIN

புதுவை முதல்வர் நாராயணசாமி தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

புதுவை பேரவையில் முதல்வர் நாராயணசாமியின் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 35 வயது மதிக்கத்தக்க இளைஞருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து முதல்வர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சட்டப்பேரவை முழுமையாக மூடப்பட்டது. 

இந்த நிலையில் முதல்வர் நாராயணசாமிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு கரோனா பரிசோதனை பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை கரோனா முடிவு அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் முதல்வர் நாராயணசாமியை ஐந்து நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

எந்தவித அரசியல் நிகழ்ச்சிகளும் ஆய்வுகளிலும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் முதல்வர் நாராயணசாமி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் முதல்வர் அலுவலகம், முதல்வர் வீடு அவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT