தற்போதைய செய்திகள்

கரையைக் கடந்தது நிவர் புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம் 

DIN

சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த அதி தீவிர நிவர் புயல் புதுச்சேரி இடையே நேற்று இரவு கரையை  கரையைக் கடக்க தொடங்கிய நிலையில் அதன் மையப்பகுதிம் நள்ளிரவில் முதல் கடக்க தொடங்கியது,

இந்நிலையில் அதிதீவிர புயலாக இருந்த நிவர் புயல் வலுவிழந்து தீவிர புயலாக மாறி நேற்று இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணி அளவில்  புயல் கரையை கடந்து என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து..

புயல் கரையைக் கடந்தபோது, மணிக்கு 110 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. பல்வேறு இடங்களில் பலத்தமழை கொட்டியது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின் கம்பங்கள் சரிந்தன.

புயல் கரையைக் கடந்த பிறகு, கடலோர மாவட்டங்களில் புயலின் தாக்கம் 6 மணி நேரத்துக்கு தொடரும். அதன்பிறகு, படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்!

மார்க்சிஸ்ட் கம்யூ. எக்ஸ் பக்கம் முடக்கம்!

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

SCROLL FOR NEXT