முகப்பு
தற்போதைய செய்திகள்

பெரம்பலூர் அருகே இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை 

பெரம்பலூர் அருகே இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்டது  செவ்வாய்க்கிழமை இரவு தெரியவந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:57 PM
பகிர்:

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்டது  செவ்வாய்க்கிழமை இரவு தெரியவந்தது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள விகளத்தூர் மில்லத் நகரைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (35). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரஹமத் நிஷா (29). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஷபா (7), ஷனா (4) ஆகிய  2 பெண் குழந்தைகள.

 ரஹ்மத் நிஷா தனது குழந்தைகளுடன் மில்லத் நகரில் உள்ள வீட்டின் முதல் தளத்தில்  வசித்து வந்தார். அதே வீட்டில் தரை தளத்தில் ரஹமத் நிஷாவின் மாமனார் சபியுல்லா, மாமியார் முஸ்திரி பேகம் வசித்து வருகின்றனர். குடும்பப் பிரச்சனை காரணமாக மாமனார், மாமியாருடன் ரஹமத் நிஷா  கடந்த சில மாதங்களாக பேசுவதில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரஹமத் நிஷா வீட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு துர்நாற்றம் வீசியது. இதையறிந்த,  அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வி.களத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரஹமத் நிஷா தனது குழந்தைகள் ஷபா, ஷனாவை கொன்று, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தாய் மற்றும் குழந்தைகளின் உடலிலிருந்து துர்நாற்றம் வீசியதால், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

இச் சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →