விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை காவல்துறையை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள ராயபுரம் கிராமத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஆடு மற்றும் கோழி திருடுபோனது தொடர்பாக புகாரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து ராயபுரம் கிராமத்தில் இரவு வேளைகளில் இளைஞர்கள் காவல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடந்த நான்கு நாள்களுக்கு முன்னர் நள்ளிரவில் ஏத்துக்கபட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் சைக்கிளில் ராயபுரம் வழியே சென்றுள்ளனர். அப்போது காவல் பணியில் ஈடுபட்டிருந்த வேண்டி ராயபுரம் கிராமத்து இளைஞர்கள் அந்த இருவரையும் பிடித்து ஆடு திருட வந்தவர்கள் என்னை தாக்கி உள்ளனர். இதில், காயமடைந்த இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த இரு இளைஞர்கள் தாக்கப்பட்டது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் தாக்கியவர்கள் யாரையும் கைது செய்யவில்லை.
வழக்குப்பதிவு செய்து மூன்று நாள்கள் ஆகியும் இருவரை தாக்கிய ராயபுரத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்யாததால் காவல்துறையை கண்டித்தும் தாக்கியவர்களை கைது செய்யக்கோரியும் வெள்ளிக்கிழமை தொழுகையை சேர்ந்த சுமார் 100 பேர் சிவகாசி விளாம்பட்டி சாலையில் தேன் காலனி பேருந்து நிறுத்தம் அருகே காலை சுமார் 7.30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன், வட்டாட்சியர் ராமசுப்பிரமணியம் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் போராட்டக்காரர்கள் எங்கள் ஊர்க்காரர்கள் தாக்கியவர்களை கைது செய்யும் வரை மறியலை கைவிட மாட்டோம் எனக் கூறிவிட்டனர்.
இந்நிலையில், மறியலில் ஈடுபட்டிருந்த லட்சுமி என்ற பெண் பாட்டிலில் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி காவல்துறையை கண்டித்து கோஷமிட்டப்படி தீக்குளிக்க முயன்ற லட்சுமியை பெண் காவலர் கீர்த்திகா தடுக்க முயன்றபோது இருவரும் சாலையில் உருண்டு உள்ளனர். இதில், பெண் காவலர் கீர்த்தி தலையில் காயம் ஏற்பட்டதை அடுத்து சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பேசிய காவல் துணை கண்காணிப்பாளர் இளைஞர்கள் இருவரை தாக்கியவர்களை உறுதியாக கைது செய்வோம் எனக் கூறியதை அடுத்து காலை சுமார் 9.40 மணிக்கு போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் சிவகாசி விளாம்பட்டி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. கரோனா தடை உத்தரவு அமலில் இருக்கும்போது தடையை மீறி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏத்துக்கபட்டியைச் சேர்ந்த சுமார் 100 பேர் மீது மாறனேரி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.