மதுசூதனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின். 
தற்போதைய செய்திகள்

மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

DIN

சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான இ.மதுசூதனன் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். 

அவரது உடல் தண்டையார்பேட்டையில் உள்ள அவரது உடல் மக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் மதுசூதனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். 

அஞ்சலி செலுத்திய பின்னர் முதல்வர் ஸ்டாலின் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

மதுசூதனனின் உடல் இன்று வெள்ளிக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டப்படும்: முதல்வர் ஸ்டாலின்

ஓடிடியில் துரந்தர்..! தமிழ் உள்பட 3 மொழிகளில் ரிலீஸ்!

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

SCROLL FOR NEXT