தற்போதைய செய்திகள்

புதுச்சேரி முதல்வர் ஆக.20-ம் தேதி தில்லி செல்கிறார்!

வரும் 20 ஆம் தேதி தில்லி செல்லும்  முதல்வர் ரங்கசாமி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

DIN


புதுச்சேரி:  வரும் 20 ஆம் தேதி தில்லி செல்லும்  முதல்வர் ரங்கசாமி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் தலைமையிலான குழுவினர், அண்மையில் தில்லி சென்று உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவை தலைவர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்தனர்.

அப்போது புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களை வழங்க வேண்டும். பட்ஜெட்டிற்கு ஒப்புதல் தரவேண்டும், புதிய சட்டப்பேரவை கட்டடத்துக்கு அனுமதி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர். பிறகு வெள்ளிக்கிழமை இரவு அவர்கள் புதுச்சேரி திரும்பினர்.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப் பேரவை அலுவலகத்தில் சட்டப் பேரவைத் தலைவர் ஆர். செல்வம் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். 
அப்போது அவர் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்திற்கான நிதி உதவி மற்றும் பட்ஜெட்டுக்கு அனுமதி வழங்க வேண்டுமென மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். அவர்களும் ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி தில்லி சென்று பிரதமர், மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளார். அதன்பிறகு புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் குறித்து தேதி தெரிவிக்கப்படும்..

புதுச்சேரி மாநிலத்திற்கான வரும் செப்டம்பர் மாதம் வரையிலான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ரூ. 330 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT