தற்போதைய செய்திகள்

கரோனா எதிரொலி: பாடத்திட்டங்களைக் குறைத்தது தமிழக அரசு

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாடத்திட்டங்களைக் குறைத்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் தற்காலிகமாக இணைய வழி வகுப்புகளில் இயங்கி வருகின்றன. இதன்காரணமாக மாணவர்களின் கற்றல் சுமையைக் குறைக்கும் விதமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி 1,2 ஆம் வகுப்புகளுக்கு 50 சதவிகித பாடங்களும், 3,4 ஆம் வகுப்புகளுக்கு 49 சதவிகித பாடங்களும், 5 ஆம் வகுப்புக்கு 48 சதவிகித பாடங்களும், 6 ஆம் வகுப்புக்கு 47 சதவிகித பாடங்களும், 7,8 ஆம் வகுப்புகளுக்கு 46 சதவிகித பாடங்களும், 9 ஆம் வகுப்புக்கு 38 சதவிகித பாடங்களும், 10 ஆம் வகுப்புக்கு 39 சதவிகித பாடங்களும், 11,12 ஆம் வகுப்புகளுக்கு 35 சதவிகித பாடங்களும் குறைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT