தற்போதைய செய்திகள்

பட்ஜெட் தாக்கல்: பட்ஜெட் தாக்கல்: வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தாக்கல்

பத்து ஆண்டுகளுக்குப் பின் அமைந்துள்ள திமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை கூடியது. 

DIN


சென்னை: பத்து ஆண்டுகளுக்குப் பின் அமைந்துள்ள திமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை கூடியது. 

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி,  பேரவைக்கு வந்த பேரவைத் தலைவர் அப்பாவு பேரவையின் அலுவல்களை கணினி திரையை பார்த்து படித்து வந்தார்.  

இதையடுத்து காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார்.  

6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. 

திருத்திய வரவுசெலவு அறிக்கை இந்த நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு பொருந்தும் .

அரசின் கடன்சுமையை சரிசெய்து நிதிநிலைமை மேம்படுத்துவது நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று. 

வல்லுநர்களின் கருத்தை பெற்று உரிய முறையில் செயல்படும் வழிமுறைகளை முதல்வர் வகுத்துள்ளார். 

தேர்தல் வாக்குறுதியின்படி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது .

தேர்தல் வாக்குறுதியின்படி, வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும். 

தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம். 

தமிழகத்தின் நிதிநிலை சரியாக 3 ஆண்டுகள் ஆகும். 
ஒரே ஆண்டில் செய்து முடிக்க இயலாத அளவுக்கு பணி மிகக் கடுமையாக உள்ளது. 

பணிகளை செய்து முடிக்க 2,3 ஆம்டுகள் வரை முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். 

பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT