தற்போதைய செய்திகள்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ரூ.257.16 கோடி ஒதுக்கீடு

மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ரூ.257.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

DIN

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ரூ.257.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டது.  தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்த மக்களை தேடி வரும் மருத்துவம் திட்டத்திற்கு ரூ.257.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* மேலும் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.741.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

* தமிழக சுகாதார சீரமைப்புத் திட்டத்திற்காக ரூ.116.46 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.18,933.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

* தமிழ்நாடு சித்தா பல்கலைகழகம் அமைக்க முதற்கட்டமாக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ.1,046.09 கோடி நிதி ஒதுக்கீடு.

* 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 1.303 ஆக அதிகரிக்கப்படும்.

* டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்திற்கு ரூ.959.20 கோடி நிதி ஒதுக்கீடு.

* மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 13 மாதங்களாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT