தற்போதைய செய்திகள்

ரூ.400 கோடி செலவில் தூய்மை பாரத இயக்கம்: பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தில் ரூ.400 கோடி செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

DIN


சென்னை: தமிழகத்தில் ரூ.400 கோடி செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டு வருகிறது.  தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.  

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
*  2021-22 ஆம் ஆண்டில் ரூ.8,017.41 கோடி செலவில் 2,89,877 வீடுகள் கட்டப்படும்.

* கிராமப்புறங்களில் ரூ.400 கோடி செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்.

* ஊரக வேலை உறுதித்திட்ட பணிநாட்களை 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.

* ஊரக வேலை உறுதித்திட்ட ஊதியத்தை ரு.300 ஆக உயர்த்த வலியுறுத்தப்படும்.

* கிராமப்புறங்களில் உள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அனைத்து நகரங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் நடைபாதைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT