தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி

DIN

புதுச்சேரி மாநிலத்தில் டிசம்பர் 15ஆம் தேதி வரை இருந்த பொது முடக்க தளர்வு ஜனவரி இரண்டாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜனவரி 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு நேர பொது முடக்கத்தில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு டிச.24, டிச 25ஆம் தேதிகளில் அதிகாலை 2 மணிவரை ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக டிச.31ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை இரவு நேர ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. புதுவை அரசு இதற்கான உத்தரவை புதன்கிழமை பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 192

கார் விபத்தில் சிக்கிய அமைச்சர் மகன்!

பாஜகவால் 200 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது -சசி தரூர் கணிப்பு

முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

‘ஸ்டார்’ சுரபி! அதிதி போஹன்கர்...

SCROLL FOR NEXT