முகப்பு
தற்போதைய செய்திகள்

சிலரது கணக்குகளை முடக்காதது ஏன்?: டிவிட்டர் விளக்கம்

ஆயிரத்திற்கும் அதிகமான சுட்டுரைக் கணக்குகளை முடக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், சிலரது கணக்குகளை சுட்டுரை நிறுவனம் முடக்கவில்லை. இது குறித்து சுட்டுரை நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
பகிர்:


ஆயிரத்திற்கும் அதிகமான சுட்டுரைக் கணக்குகளை முடக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், சிலரது கணக்குகளை சுட்டுரை நிறுவனம் முடக்கவில்லை. இது குறித்து சுட்டுரை நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில், குடியரசு நாளன்று நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது.

இது குறித்து பலதரப்பட்ட தகவல்கள் சமூக வலைதளமான சுட்டுரைப் பக்கத்தில் பகிரப்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாகவும், காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்தும் சுட்டுரையில் தகவல்கள் பகிரப்பட்டன. 

இதன் மூலம் காவல்துறையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுமென்றும், மக்களிடையே விவசாயிகள் போராட்டம் குறித்து பதற்றமான சூழல் ஏற்படுமென்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

இதனைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் குறித்து அவதூறாக கருத்துகளைப் பதிவிட்டவர்களின் சுட்டுரைப் பக்கத்தை முடக்க வேண்டும் என்று டிவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. 

ஆயிரத்து 178 சுட்டுரைக் கணக்குகளை முடக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், அவற்றில் 500 கணக்குகளை மட்டுமே டிவிட்டர் நிறுவனம் முடக்கியது.

இந்நிலையில், அனைத்து சுட்டுரைக் கணக்குகளையும் முடக்காதது குறித்து டிவிட்டர் விளக்கம் அளித்துள்ளது.

அதில், இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு மத்திய அரசு வழங்கிய அனைத்து கணக்குகளையும் முடக்கவில்லை. 500 கணக்குகள் மட்டுமே முடக்கப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகை நிறுவனம் ஆகியவற்றின் சுட்டுரைக் கணக்குகளை கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு முடக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →