தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 2,079 பேருக்கு தொற்று

DIN


தமிழகத்தில் இன்று மேலும் 2,079 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 25,35,402 ஆக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,43,429 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 2,079 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 25,35,402 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது வரை 3,55,37,967 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

அதில் அதிகபட்சமாக கோவையில் 220 பேருக்கும், சென்னையில் 150 பேருக்கும்,  சேலத்தில் 142 பேருக்கும், ஈரோட்டில் 128 பேருக்கும், திருப்பூரில் 121 பேருக்கும், தஞ்சாவூரில் 120 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 வயதுக்குள்பட்ட 128 சிறார்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 1,202 பேர் ஆண்கள், 877 பேர் பெண்கள். தொற்று பாதித்த ஆண்களின் எண்ணிக்கை 14,81,476 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,53,888 ஆகவும், திருநங்கைகள் 38 ஆகவும் அதிகரித்துள்ளது.   

இதனிடயே, நோய்த் தொற்றிலிருந்து இன்று 2,743 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 24,73,781 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 29 போ் உயிரிழந்துள்ளனர். அதில் 19 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 10 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,724-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT