மெத்தை குடோனில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்
திருப்பூர் இந்திரா நகரில் உள்ள மெத்தை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
தற்போதைய செய்திகள்மெத்தை குடோனில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்
திருப்பூர் இந்திரா நகரில் உள்ள மெத்தை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருப்பூர்: திருப்பூர் இந்திரா நகரில் உள்ள மெத்தை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
கேரளம் மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் கபீர்குட்டி, இவர், திருப்பூர் இந்திரா நகரில் ராம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மெத்தை குடோன் நடத்தி வருகிறார். இவர் மொத்தமாக பஞ்சுகளை வாங்கி மெத்தை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் உள்ள மெத்தை குடோனில் பரவிய தீயணை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத்துறையினர்.
இந்த நிலையில், மெத்தை குடோனில் பணியில் இருந்த கபீர்குட்டி மற்றும் ஊழியர்கள் புதன்கிழமை இரவு குடோனைப் பூட்டி விட்டு வீடு திரும்பினர். இதன் பிறகு குடோனைத் திறக்க ஊழியர்கள் வியாழக்கிழமை காலை வந்துள்ளனர். அப்போது குடோனில் தீ பிடித்து இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஊழியர்கள் கொடுத்த தகவலின்பேரில் திருப்பூர் வடக்கு தீயணைப்பத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதன் பிறகு சுமார் 2 மணி நேரம் போராடி குடோனில் பரவிய தீயை அணைத்தனர். எனினும், இதில், பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மெத்தைகள் எரிந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விபத்து குறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.