முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடத்திய  துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

Updated On : 31 ஜூலை 2021, 9:36 am IST
காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: தீவிரவாதி சுட்டுக் கொலை 
பகிர்:


ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடத்திய  துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவின் நாக்பெரான்-தார்சார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். 

Advertisement

Advertisement

இந்த தாக்குதலில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.