தற்போதைய செய்திகள்

மேட்டூரில் ஆடிப்பெருக்கில் மக்கள் கூட தடை: சார் ஆட்சியர் உத்தரவு

DIN


மேட்டூரில் ஆடிப்பெருக்கில் மக்கள் கூட தடை விடித்து மேட்டூர் சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

மேட்டூர் காவிரியில் ஆடிப்பெருக்கில் நீராட 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கூடுவார்கள். அதேபோல் ஆடி அமாவாசை தினத்தில் மூதாதையர்களுக்கு தர்பனம் கொடுக்க ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள். ஆடி 28-இல் காவிரியில் நீராட மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வார்கள். 

சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக மேட்டூருக்கு வருவார்கள். காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசித்து மேட்டூர் அணை பூங்காவிற்கு செல்வார்கள்.

தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதாலும் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஆடி 18 தினமான ஆகஸ்ட் 3 ஆம் தேதியும், ஆடி அமாவாசை தினமான ஆகஸ்ட் 8 ஆம் தேதியும் ஆடி 28 நாளான ஆகஸ்ட் 13 ஆம் தேதியும் மேட்டூர் காவிரிப்படுகை, அணைக்கட்டு முனியப்பன் கோவில், மேட்டூர் அணை பூங்கா பகுதிகளில் ஆகஸ்ட் 3, 8 மற்றும் 13 ஆகிய நாள்களில் பொதுமக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. 

அந்த நாள்களில் வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் வருகை தருவதை தவிர்க்க வேண்டும்.  இதனை வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று மேட்டூர் சார் ஆட்சியர் வீர்பிரதாப்சிங் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT