தற்போதைய செய்திகள்

பிரிட்டனில் 12-15 வயதுக்குட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி

DIN

பிரிட்டனில் 12 முதல் 15 வரை வயதிலானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த  பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

கரோனா தொற்று பரவலுக்கு எதிராக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தொற்று பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்துவது தற்போது பரவலாக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து வயதினருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் பிரிட்டனில் 12 முதல் 15 வயதிலானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட இந்த வயதிலானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆய்வுகளுக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதை தடுப்பூசி திட்டத்தின்கீழ் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT