பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை திரும்பப் பெற லியுறுத்தி சைக்கிளுக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாலாஜாபேட்டை கிழக்கு ஒன்றிய காங்கிரஸ் கட்சியினர். 
தற்போதைய செய்திகள்

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறுக: வாலாஜாபேட்டையில் காங்கிரஸ் நூதன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்,டீசல் விற்பனை நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

DIN

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி வாலாஜாபேட்டை ஒன்றிய காங்கிரஸ் கட்சி சார்பில், வி.சி.மோட்டூர் அண்ணா சிலை எதிராக உள்ள பெட்ரோல்,டீசல் விற்பனை நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஒன்றிய காங்கிரஸ் கட்சி சார்பில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து, வி.சி.மோட்டூர் அண்ணா சிலை எதிராக உள்ள பெட்ரோல் பங்க் முன்பு வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

வாலாஜாபேட்டை கிழக்கு ஒன்றிய காங்கிரஸ் தலைவர் கே.கணேசன் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான அக்ராவரம் கே.பாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார். இதில், வாலாஜா கிழக்கு ஒன்றிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பெட்ரோல் டீசல் விலையை குறைப்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.

வாலாஜாபேட்டை கிழக்கு ஒன்றிய காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை திரும்ப வலியுறுத்தி சைக்கிளுக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT