முகப்பு
தற்போதைய செய்திகள்

சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக தீர்மானம்

சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறறப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
பகிர்:


கிருஷ்ணகிரி: சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறறப்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள்  ஆலோசனை கூட்டம், கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் மாவட்ட செயலாளர் கே அசோக்குமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் கே.பி. காத்தவராயன், டி. எம். தமிழ்செல்வம் எம்எல்ஏ , கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் நகர செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களான சிமெண்ட், செங்கல், கம்பி ஆகியவற்றின் விலை உயர்ந்து வருவதையும், அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டிப்பது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வது என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →