சிவசங்கர் பாபா 
தற்போதைய செய்திகள்

சிவசங்கர் பாபா மருத்துவமனையிலிருந்து தப்பியோட்டம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் தீவிர விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா டேராடூன் தனியார் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். 

DIN

உத்தரகாண்ட்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் தீவிர விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா டேராடூன் தனியார் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். 

சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதனடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மூன்று தனித்தனி புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். 

இந்த நிலையில் சிவசங்கர் பாபா டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் வழக்கு விசாரணையை வேறொரு மாநிலத்திற்குச் சென்று நடத்துவதற்கு ஏதுவாக சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாகக் கூறப்பட்டது. 

இந்நிலையில், தமிழ்நாடு சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணைக்காக டேராடூன் சென்றபோது தனியார் மருத்துவமனையில் இருந்து சிவசங்கர் பாபா தப்பிச் சென்றுள்ளார். 

தப்பியோடிய சிவசங்கர் பாபா, உத்ரகாண்டில் தனக்கு சொந்தமான ஆசிரமங்களில் பதுங்கி உள்ளரா என என காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

மேலும் சிவசங்கர் பாபா நேபாளத்திற்கு தப்பிச்செல்லாமல் தடுக்க சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். உத்தரகாண்ட், தில்லியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT