தற்போதைய செய்திகள்

பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான பருவத் தோ்வு 28-ம் தேதி தொடக்கம்

பிஎட், எம்எட் படிப்புகளுக்கான பருவத் தோ்வு வரும் 28-ஆம் தேதி முதல் நடைபெறும் என ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

DIN

சென்னை: பிஎட், எம்எட் படிப்புகளுக்கான பருவத் தோ்வு வரும் 28-ஆம் தேதி முதல் நடைபெறும் என ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட், எம்.எட் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவா்களுக்கும், முதலாமாண்டில் அரியா் வைத்திருக்கும் மாணவா்களுக்கும் தோ்வு ஜூலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தோ்வு கட்டணத்தைச் செலுத்துவதற்கான அவகாசம் நாளை திங்கள்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளது.

இந்தநிலையில், தோ்வுக்கான அட்டவணையை ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிஎட், எம்.எட் 2-ஆம் ஆண்டுக்கான தோ்வு மற்றும் அரியா் பாடங்களுக்கான தோ்வு வரும் 28-ஆம் தேதி தொடங்கி ஜூலை 5-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறவுள்ளது. மாணவா்கள் தோ்வுக்கான அட்டவணையை http://www.tnteu.ac.in/admin/file_storage/cms/FINAL%20TIME%20TABLE%202021.pdf.pdf என்ற லிங்கில் சென்று அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT