தற்போதைய செய்திகள்

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 50 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது

நம் நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 85 நாள்களுக்குப் பிறகு 5,95,565 ஆகக் குறைந்துள்ளது

DIN

புது தில்லி: நம் நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 85 நாள்களுக்குப் பிறகு 5,95,565 ஆகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 48,698 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. முதல் நாளாக தினசரி புதிய பாதிப்புகள் 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 

நம் நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 85 நாள்களுக்குப் பிறகு 5,95,565-ஆகக் குறைந்துள்ளது. இதுவரை நாட்டில் 2,91,93,085 பேர் தொற்றிலிருந்து குணடைந்துள்ளனர். 

தொடா்ந்து 44-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 64,818 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 

நாட்டில் தினசரி கரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. ஒரே நாளில் 1,183-ஆகக் குறைந்துள்ளது.  இதுவரை 3,94,493 போ் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 17,45,809 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 40,18,11,892 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 31,50,45,926 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் கல்லூரி மாணவா்களிடம் பேராசிரியா் பண மோசடி

திமுக ஆட்சியில் போராட்டக்களமாக மாறிய தமிழகம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

முத்தியால்பேட்டை மூலஸ்தம்மன் கோயிலில் ஆடித்திருவிழா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

SCROLL FOR NEXT