உத்தரகண்டில் நாளை முதல் மீண்டும் இணைய வகுப்புகள் தொடக்கம் 
தற்போதைய செய்திகள்

உத்தரகண்டில் நாளை முதல் (ஜூலை 1) மீண்டும் இணைய வகுப்புகள் தொடக்கம்

உத்தரகண்ட் மாநிலத்தில் நாளை முதல் (ஜூலை 1) பள்ளிகள் மீண்டும் இணைய வகுப்புகளைத் தொடங்கப்பட உள்ளது.

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் நாளை முதல் (ஜூலை 1) பள்ளிகள் மீண்டும் இணைய வகுப்புகளைத் தொடங்கப்பட உள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இணைய வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் உத்தரகண்டில் விடுக்கப்பட்டிருந்த பள்ளிகளுக்கான கோடை விடுமுறை இன்றுடன் நிறைவடைந்த நிலையில் மீண்டும் வகுப்புகள் தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேரடி வகுப்புகளுக்கு மாற்றாக இணைய வகுப்புகள் நடைபெறும் என மாநில பள்ளிக்கல்வித் துறை இணைச் செயலர் ஜே.எல்.சர்மா புதன்கிழமை தெரிவித்தார். .

பள்ளிகள் திறப்பது குறித்த புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் வரை இணைய வகுப்புகளை நடத்தப்படும் என அவர் விளக்கமளித்துள்ளார்.

உத்தரகண்டில் தற்போது 2,245 பேர் கரோனா தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

கல்லிடைக்குறிச்சியில் எஸ்டிபிஐ பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம்

திசையன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

கால்வாயில் காா் கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு; நால்வா் காயம்

SCROLL FOR NEXT