முகப்பு
தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் புதிதாக 54,022 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 54,022 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
மகாராஷ்டிரத்தில் புதிதாக 54,022 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 54,022 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள தகவலில், மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 54,022 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 49,96,758 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 898 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 74,413ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று ஒரேநாளில் 37,386 பேர் குணமடைந்தனர். இதுவரை 42,65,326 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி 6,54,788 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →