தற்போதைய செய்திகள்

வாரத்தில் 55 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்பவரா நீங்கள்? எச்சரிக்கை

DIN

வாரத்தில் 55 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை எச்சரித்துள்ளது.

நீண்ட வேலை நேரங்களுடன் தொடர்புடைய உயிர் இழப்பு குறித்து சர்வதேச தொழிலாளர் நல அமைப்புடன் ஐக்கிய நாடுகள் அவை மேற்கொண்ட மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் சர்வதேச சுற்றுச்சூழல் இதழில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வறிக்கையில், அதிக வேலை நேரங்களில் பணியாற்றும் நபர்களுக்கு உடல்நிலையில் பின்னடைவு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.

2000ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் அதிகப்படியான வேலை நேரத்தில் பணியாற்றிய 7,45,000 பேர் மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் காரணமாக மரணித்துள்ளது தெரியவந்துள்ளது.

"வாரத்தில் 55 மணிநேரம் அல்லது அதற்கும் மேற்பட்ட அளவில் வேலை செய்வது கடுமையான உடல்நலக் கேட்டிற்கு இட்டுச்செல்கிறது" என்று உலக சுகாதார நிறுவனத்தின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறையின் இயக்குநர் மரியா நீரா எச்சரித்துள்ளார்.

மேலும் குறிப்பிட்ட கால அளவைக் காட்டிலும் அதிகமாக வேலை செய்பவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் மாரடைப்பு மற்றும் இதய நோய் பாதிப்பில் சிக்குவது அதிகரிப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT