கர்தார்பூர் வழித்தடம்: குருத்வாரா தர்பார் சாஹிப்புக்கு புனிதப் பயணம் மேற்கொண்ட பஞ்சாப் முதல்வர் 
தற்போதைய செய்திகள்

கர்தார்பூர் வழித்தடம்: குருத்வாரா தர்பார் சாஹிப்புக்கு புனிதப் பயணம் மேற்கொண்ட பஞ்சாப் முதல்வர்

சீக்கியர்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் குருத்வாரா தர்பார் சாஹிப்புக்கு பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி புனிதப் பயணம் மேற்கொண்டார்.

DIN

சீக்கியர்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் குருத்வாரா தர்பார் சாஹிப்புக்கு பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி புனிதப் பயணம் மேற்கொண்டார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள்  குருத்வாரா தர்பார் சாஹிப்புக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். கடந்த 2019ஆம் ஆண்டு கர்தார்பூர் வழித்தடம் அமைக்கப்பட்ட நிலையில் கரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சீக்கியர்களின் குருவான குருநானக் தேவ்வின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 17ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கர்தார்பூர் வழித்தடத்தில் புனிதப் பயணம் மேற்கொண்டார்.

முதல்வர் சன்னியுடன் அமைச்சர்கள் உள்பட 30 குருத்வாரா தர்பார் சாஹிப்புக்கு புனிதப் பயணம் மேற்கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT