சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.41 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் 
தற்போதைய செய்திகள்

சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.41 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

துபைலிருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ. 1.41  கோடி மதிப்பிலான 3.22 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

DIN

துபைலிருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ. 1.41  கோடி மதிப்பிலான 3.22 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், துபையிலிருந்து அக்டோபர் 29 அன்று சென்னை வந்திறங்கிய பயணிகளை வெளியே செல்லும் வாயிலில் சுங்க அதிகாரிகள் இடைமறித்து பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்ளாடைக்குள் வைத்து மறைத்து கடத்தி வரப்பட்ட 3.22 கிலோ கிராம் தங்கத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இருவேறு பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையைத் தொடர்ந்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்தத் தங்கத்தின் மதிப்பு ரூ.1.41 கோடி ஆகும். 

இதுதொடர்பாக  சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீரன் சின்னமலை நினைவு நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: மாணவர் உள்பட இருவர் பலி!

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

SCROLL FOR NEXT