ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு 
தற்போதைய செய்திகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9-ம் தேதியும் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் அன்றைய தினங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதர மாவட்டங்களில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு மட்டும் பொதுவிடுமுறை அறிவிக்கப்படுவதாகவும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT