இந்திய விமானங்களுக்கான தடையை நீக்கும் ஐக்கிய அரபு அமீரகம்
கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | ‘நாட்டில் இதுவரை 47.85 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு
Advertisement
இந்நிலையில் இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்களுக்கு தற்காலிக தடையை உலக நாடுகள் பலவும் விதித்து வருகின்றன. அந்த வகையில் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய விமானங்களுக்கு தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான போக்குவரத்திற்கான தடையை ஆகஸ்ட் 5 முதல் நீக்க முடிவு செய்துள்ளதாக நாட்டின் தேசிய அவசர மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 1,908 பேருக்கு கரோனா தொற்று
எனினும் ஐக்கிய அரபு அமீரகம் வரும் பயணிகள் நுழைவு அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும் எனவும் பயணம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.