முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 875 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 875 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 5 நவம்பர், 2021 at 7:17 PM
தமிழகத்தில் புதிதாக 875 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 875 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்தனர். 

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை (நவ.5) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 875 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,07,368-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து 1,012 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,60,419-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 10,745 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,05,832 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.