பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்? ராகுல் பரபரப்பு கருத்து 
தற்போதைய செய்திகள்

பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்? ராகுல் பரபரப்பு கருத்து

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்கட்சியின் எம்பியும், முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

DIN

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்கட்சியின் எம்பியும், முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

காங்கிரஸ், பாஜக-அமரீந்தர் சிங் கூட்டணி, ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவதால் பல முனைப் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள் பூசல் இல்லை எனவும், காங்கிரஸ் முதல்வரை கட்சியினர் தேர்ந்தெடுப்பர் எனவும் அக்கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, “பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் பஞ்சாப் முதல்வராக யார் செயல்பட்டாலும் மற்றவர் அவருக்கு ஆதரவளிப்பார் என்று எனக்கு உறுதியளித்துள்ளனர். காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரை கட்சியினர் முடிவு செய்வார்கள். இதுதொடர்பாக எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT