தற்போதைய செய்திகள்

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய பரமக்குடி மாணவன்: தூத்துக்குடி விமான நிலையத்தில் வரவேற்பு 

DIN


உக்ரைன் நாட்டில் இருந்து மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் நாடு திரும்பிய ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த மாணவனுக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். 

உக்ரைன்- ரஷியா இடையே போர் நடந்து வரும் சூழ்நிலையில் உக்ரைனில் மருத்துவ படிப்பை மேற்கொண்டு வரும் இந்திய மாணவர்கள் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலமாக மாணவர்கள் எந்தவித கட்டணமின்றி இலவசமாக அழைத்து வரப்படுகின்றனர். 

கடந்த இரண்டு வார காலமாக ஏராளமான மாணவர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள சில மாணவர்களை அழைத்துவரும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று கொச்சின், ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் விமானம் மூலமாக தாயகம் அழைத்து வரப்பட்டனர். 

உக்ரைனில் தங்கி இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த கண்ணன்- அம்பிகா தம்பதியரின் மகன் சந்தோஷ் சென்னை வந்து அங்கிருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வந்து இறங்கினர். 

மாணவனை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பீ.கீதாஜீவன், தமிழக மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜகவினர் மாணவனுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். மாணவன் குடும்பத்தினர் அவரை வரவேற்றனர். 

அதனைத் தொடர்ந்து மாணவன் சந்தோஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  
மத்திய அரசின் முயற்சியால் நாங்கள் மீட்கப்பட்டு நாடு திரும்பியுள்ளோம். உதவிய மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கு நன்றி என்று கூறினார். 

இதனிடையே ரஷிய நாட்டில் இருந்து மருத்துவ படிப்பை மேற்கொண்டு வரும் மாணவி பிருந்தா விமானம் மூலமாக தூத்துக்குடி வந்து இறங்கினார். அவரையும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT