பல்லாவரம் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி அருள்மிகு ஸ்ரீ தண்டுமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
தற்போதைய செய்திகள்

கன்டோன்மென்ட் பல்லாவரம் ஸ்ரீ தண்டுமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்!

சென்னை கன்டோன்மென்ட் பல்லாவரம் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி அருள்மிகு ஸ்ரீ தண்டுமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN


சென்னை கன்டோன்மென்ட் பல்லாவரம் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி அருள்மிகு ஸ்ரீ தண்டுமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாரியம்மன் கோவில் வீதியிலுள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் ஆலயத்தின் நூதன ராஜகோபுர ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கும்பாபிஷேகத்தையொட்டி, வெள்ளிக்கிழமை (ஆக.18) யாகசாலை பூஜை தொடங்கியது. அடுத்தடுத்த நாள் யாகசாலை பூஜைகள் நடைபெற்று, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜையுடன் ஆகுதிகளும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு யாத்ராதானமும் மகா பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் கும்பம் புறப்பாடு நடைபெற்று; நூதன ராஜகோபுர விமான கலசம் மற்றும் சர்வசக்தி ஸ்ரீ தண்டுமாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். 

தொடர்ந்து மகா அபிஷேகமும் மாலையில் அம்மன் திருவீதிவுலாவும் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை கிராம நாட்டாண்மை, ஆலய நிர்வாகிகள், கட்டத் திருப்பணிக் குழுவினர் மற்றும் கும்பாபிஷேக விழாக் குழுவினர் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குஜராத் - மதுரை இடையே இன்றுமுதல் சிறப்பு ரயில்கள்!

சாலையில் கிடந்த 7 பவுன் நகைகள் போலீஸாரிடம் ஒப்படைப்பு

இணையவழியில் பொதுமக்கள் இழந்த ரூ.1.37 கோடி மீட்பு!

கோவையிலிருந்து ராஜஸ்தானுக்கு சிறப்பு விரைவு ரயில்கள்

தமிழகத்தில் நவ.8 வரை மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT