தற்போதைய செய்திகள்

மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்: சட்ட அமைச்சராக அர்ஜூன் ராம் மேக்வால் நியமனம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இன்று இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

DIN


புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இன்று இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிரண் ரிஜிஜுவுக்கு பதிலாக அர்ஜூன் ராம் மேக்வால் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின்படி,  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய அமைச்சரவையில்  அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மத்திய சட்ட அமைச்சராக இருந்த  கிரண் ரிஜிஜு மத்திய புவி அறிவியல் துறை அமைச்சராகவும், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சராகவும், கலாசாரத் துறை அமைச்சராக இருந்த அர்ஜுன் ராம் மேக்வால் சட்ட  அமைச்சராகவும் நியமிக்கப்ட்டுள்ளார்.

புவி அறிவியல் அமைச்சகத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT