கில்லி மறுவெளியீட்டுத் தேதி அறிவிப்பு
நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான கில்லி படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனைத் திரைப்படமாக அமைந்தது கில்லி. இயக்குநர் தரணி இயக்கத்தில் உருவான இப்படம் 2004 ஏப்ரல் 17 ஆம் தேதி திரைக்கு வந்தது. படம் வெளியாகி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பிளாக்பஸ்டர் ஆனது.
தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான கில்லி, ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்கிற சாதனையைப் படைத்து விஜய்யின் மார்கெட்டை அதிகரித்தது.
ஒக்கடுவிலும், கில்லியிலும் வில்லனாக நடித்து அசத்திய பிரகாஷ் ராஜ், ‘ஹாய் செல்லம்’ என்கிற வசனத்தைப் பேசியது இந்தப் படத்தில்தான். கில்லி திரைப்படம் 4கே டிஜிட்டல் தரத்தில் மீண்டும் திரைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியானது
Advertisement
Advertisement
இப்படத்துக்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்திருப்பார். இப்படத்துக்கு இவர் இசையமைத்த அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆனது. அதிலும் அப்படிபோடு, அர்ஜுனரு வில்லு ஆகிய பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் அதிகம் கேட்கப்படுகிறது.
இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.