முகப்பு
தற்போதைய செய்திகள்

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு பலி

சென்னை குரோம்பேட்டை, பொன்னேரியில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு பலியாகினர்.

Updated On : 4 ஏப்ரல், 2024 at 7:59 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை குரோம்பேட்டை, பொன்னேரியில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனா்.

இதுகுறித்து ரயில்வே காவல் துறையினா் கூறியதாவது:

சென்னை குரோம்பேட்டையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பிரணவ் (23), சதீஷ் (39) ஆகிய 2 பேர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Advertisement

இதேபோன்று பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, சேலத்தை சேர்ந்த சேகர் (40), சுப்பிரமணி (50) விரைவு ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது நான்கு பேரும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக ரயில்வே காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments