வயநாடு ராகுல் காந்தி பேரணி... பி.டி.ஐ.
தற்போதைய செய்திகள்

முஸ்லிம் லீக் கொடிகளைக் கொண்டுவர ‘வெட்கப்படுகிறார்’ ராகுல் – ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

வயநாடு காங்கிரஸ் பேரணியில் முஸ்லிம் லீக் உள்பட கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் இடம் பெறாததைப் பற்றி பாரதிய ஜனதா...

இணையதளச் செய்திப் பிரிவு

வயநாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காகச் சென்ற பேரணியில் கட்சிக்  கொடிகள் அனைத்தையும் காங்கிரஸ் தவிர்த்ததைச் சுட்டிக்காட்டி, முஸ்லிம் லீக் கொடிகளைக் கொண்டுவர ராகுல் காந்தி “வெட்கப்படுவதாக” மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவருமான ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியைத் தோற்கடித்தவரான இரானி, அப்படி வெட்கப்பட்டால், அவர்களுடைய ஆதரவை ராகுல் காந்தி நிராகரித்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அரசியல் பிரிவான எஸ்.டி.பி.ஐ. ஆதரவை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட பா.ஜ.க. வேட்பாளரான கட்சியின் மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் இன்று வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களுடன் ஸ்மிருதி இரானி பேசினார்.

வயநாடு தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய புதன்கிழமை ராகுல் காந்தி சென்ற பேரணியில் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

31 பந்துகளில் சதம் விளாசிய உர்வில் படேல்..! சிஎஸ்கேவின் எழுச்சி நாயகன்!

இலங்கை அருகே உருவாகும் புதிய புயலின் பெயர் தெரியுமா?

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

SCROLL FOR NEXT