விளைநிலங்களில் புகுந்த யானைகளை டிராக்டர் உதவியுடன் விரட்டி வரும் அந்த பகுதி விவசாயிகள். கின்றனர்.  
தற்போதைய செய்திகள்

கரடிமடை பகுதியில் குட்டியுடன் விளைநிலங்களுக்குள் புகுந்த யானை கூட்டம்

கோவை மாவட்டம், தீத்திபாளையம் அடுத்த கரடிமடை பகுதியில் வெள்ளிக்கிழமை குட்டியுடன் விளைநிலங்களுக்குள் 5-க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்தது.

DIN

கோவை: கோவை மாவட்டம், தீத்திபாளையம் அடுத்த கரடிமடை பகுதியில் வெள்ளிக்கிழமை குட்டியுடன் விளைநிலங்களுக்குள் 5-க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்தது.

விளைநிலங்களில் புகுந்த யானைகளை டிராக்டர் உதவியுடன் அந்த பகுதி விவசாயிகள் விரட்டி வருகின்றனர்.

கடந்த 5 நாள்களாக இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் புகும் காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், ஊருக்குள் புகும் காட்டு யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதாகவும், வனத்துறையினருக்கு போதுமான ஜீப் உள்ளிட்ட வாகன வசதி இல்லாததாலும் யானைகளை வனத்திற்குள் விரட்டுவதில் சிக்கல் நீடிப்பதாக குற்றசாட்டியுள்ள அந்த பகுதி விவசாயிகள், அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சோ்க்கை: செப். 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

பெரியாா் பிறந்த நாள்: அமைச்சா், மேயா் உறுதிமொழி ஏற்பு

பெரியாா் பிறந்த நாள்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மரியாதை

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் செப். 23 இல் நவராத்திரி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT