தஞ்சாவூர் அருகே மகளை கேலி செய்ததை தட்டிக் கேட்ட தந்தை கொலை செய்யப்பட்டார். 
தற்போதைய செய்திகள்

மகளை கேலி செய்ததை தட்டிக் கேட்ட தந்தை கொலை

தஞ்சாவூர் அருகே மகளை கேலி செய்ததை தட்டிக் கேட்ட தந்தை வெள்ளிக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டார்.

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மகளை கேலி செய்ததை தட்டிக் கேட்ட தந்தை வெள்ளிக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் அருகே தோட்டக்காடு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் எஸ். சத்தியமூர்த்தி (51). கூலித் தொழிலாளியான இவரது மகன் அபிஷேக்கின் (22) பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் அபிஷேக்கின் நண்பரான தோட்டக்காடு மாதா கோயில் தெருவைச் சேர்ந்த ஏசுதாஸ் மகன் ரூபன் (22) கலந்து கொண்டார்.

அப்போது, அபிஷேக்கின் தங்கையை ரூபன் கிண்டல் செய்துள்ளார். இதை சத்தியமூர்த்தி தட்டிக் கேட்டசத்தியமூர்த்தி ரூபனின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடமும் கூறியுள்ளார். பின்னர், காமராஜ் நகர் தெரு முனையில் நின்றுகொண்டிருந்த ரூபனை சத்தியமூர்த்தி கண்டித்துள்ளார்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சத்தியமூர்த்தி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தாலுகா காவல் நிலை போலீசார் வழக்குப் பதிந்து ரூபனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT