மீனாட்சி பொண்ணுங்க தொடரின் காட்சி. 
தற்போதைய செய்திகள்

இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!

நடிகர் ஆர்யனின் மீனாட்சி பொண்ணுங்க சீரியல்.

DIN

நடிகர் ஆர்யன் நடித்துவரும் பிரபல தொடரான மீனாட்சி பொண்ணுங்க சீரியல் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.

கணவனால் ஏமாற்றப்பட்ட மீனாட்சி (தாய்), தனது 4 மகள்களையும் வளர்த்து, சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழவைக்க நினைக்கிறார். அதற்காக தாயுடன் 4 மகள்களும் எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதை.

இந்த தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகை செளந்தர்யா ரெட்டி இத்தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகர் ஆர்யன் நடித்துவருகிறார். ஹரன் பிரசன்னா திரைக்கதை எழுத, முத்துக்குமாரசாமி இயக்குகிறார்.

மீனாட்சி பொண்ணுங்க தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், வரும் ஆக. 4 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு சிறப்பு கிளைமேக்ஸ் காட்சிகளுடன் இத்தொடர் நிறைவடையவுள்ளது.

கடந்த 2022 ஆகஸ்ட் முதல் ஒளிபரப்பாகிவரும் மீனாட்சி பொண்ணுங்க தொடர், இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளது இத்தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT