வாரந்தோறும் திரையரங்குகளில் புதுப்புது திரைப்படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. தங்களது விருப்ப நடிகரின் திரைப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு திரையரங்கங்களுக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்தவகையில், இந்த வாரம் திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காண்போம்.
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் மில்டன் கதை எழுதி இயக்கியுள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இப்படம் நாளை(ஆக. 2) வெளியாகிறது.
நகுல் நடிப்பில் உருவாகியுள்ள வாஸ்கோடகாமா திரைப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.
சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவான போட் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஆக. 2 ஆம் தேதி வெளியாகிறது.
இயக்குநர் வெங்கட் பிரபு தயாரித்த 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படம் நாளை(ஆக. 2) வெளியாகிறது. 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தை மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் நடித்து, இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கலக்கப்போவது யாரு பாலா, ஆர்.ஜே.விஜய், குமரவேல், பவானி ஸ்ரீ, இர்பான் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ஜமா திரைப்படத்தில் சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என் மணிமேகலை, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.