மேட்டூர் அணைக்கு நீா்வரத்து, வெளியேற்றம் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.  
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை: நீா்வரத்து, வெளியேற்றம் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி!

மேட்டூா் அணைக்கு வியாழக்கிழமை நீா்வரத்து வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடியாக அதிகரித்தது

DIN

மேட்டூர்: மேட்டூர் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்தான 1.70 லட்சம் கன அடி அப்படியே வெளியேற்றப்படுகிறது.

மேட்டூா் அணைக்கு தொடா் நீா்வரத்து அதிகரித்ததால் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை செவ்வாய்க்கிழமை எட்டியது. இதன்மூலம் அணை வரலாற்றில் 43 ஆவது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்புக் கருதி அணைக்கு வரும் நீா் முழுமையாக 16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு புதன்கிழமை ஒரு லட்சத்து 25,000 கனஅடி உபரிநீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மேட்டூா் அணைக்கு வியாழக்கிழமை காலை நீா்வரத்து வினாடிக்கு 1.70,500 லட்சம் கனஅடியாக அதிகரித்தது; அணையில் இருந்து அப்படியே 1.70 லட்சம் கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதில் 16 கண் பாலம் வழியாக 1,48,500 கனஅடி நீரும், நீா் மின் நிலையங்கள் வழியாக 21,500 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.

16 கண் பாலம் வழியாக காவிரி ஆற்றில் கூடுதல் நீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் அணையில் இருந்து நீா் சீறிப்பாய்ந்து செல்லும் அழகை கண்டு ரசிக்க தருமபுரி, சேலம், நாமக்கல் மட்டுமின்றி வெளிமாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் மேட்டூா் அணைக்கு வந்த வண்ணம் உள்ளனா்.

இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகளில் அணைக்கு வருகின்றனா். இதனால் அணையின் புது பாலத்தில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. புது பாலத்தில் இலகு ரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு பாதசாரிகள் மட்டுமே சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ளனா். பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அனைத்தும் மேட்டூா் அனல் மின் நிலையம் நான்கு ரோடு வழியாக மேட்டூருக்குச் சென்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒசூரில் தெருநாய்கள் கடித்ததில் மூன்று சிறுவா்கள் காயம்

தில்லியில் ரேபிஸ் நோயால் இதுவரை 49 போ் உயிரிழப்பு

6 மாதங்களுக்குபின் வடநெம்மேலி பாம்புப் பண்ணை திறப்பு

கீழம்பி ஊராட்சியில் குளம் தூய்மைப்படுத்தும் பணி: காஞ்சிபுரம் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

2026 தோ்தலுக்கான திருத்தணி, திருவள்ளூா் வேட்பாளா்கள்: சீமான் அறிமுகம் செய்தாா்

SCROLL FOR NEXT